பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுமா? தமிழக முதல்வருடன் பிரதமர் இன்று ஆலோசனை!

பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுமா? தமிழக முதல்வருடன் பிரதமர் இன்று ஆலோசனை!

பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுமா? தமிழக முதல்வருடன் பிரதமர் இன்று ஆலோசனை!
X

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மஹாராஷ்டிரா, தமிழகம் உள்ளிட்ட 15 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று  ஆலோசனை நடத்த உள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்து அனைத்து மாநில முதல்வர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் துணை நிலை கவர்னர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார்.இதன்படி, கேரளா, பஞ்சாப், கோவா, உத்தரகண்ட், ஜார்க்கண்ட் மற்றும் வட கிழக்கு மாநிலங்கள் உள்ளிட்ட, 21 மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் துணைநிலை கவர்னர்களுடன், காணொலி மூலம் நேற்று பிரதமர், ஆலோசனை நடத்தினார். 

அதன் தொடர்ச்சியாக, கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள, மஹாராஷ்டிரா, தமிழகம், டில்லி, குஜராத் உள்ளிட்ட, 15 மாநிலங்களின் முதல்வர்களுடன், பிரதமர் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை, ஊரடங்கு ஆகியவை தொடர்பாக, இந்த மாநிலங்களின் முதல்வர்களின் கருத்துகளை கேட்டு, அதன் அடிப்படையில் சில முக்கிய முடிவுகளை பிரதமர் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

newstm.in

Next Story
Share it