ஒலிம்பிக் நாளை தொடங்குமா? வீரர்கள் உள்பட மேலும் 12 பேருக்கு கொரோனா.. மொத்த எண்ணிக்கை 87ஆக உயர்வு !

 | 

பெரும் எதிர்பார்ப்புடன் பல சர்ச்சைகளுக்கு எதிர்ப்புகளுக்கு மத்தியில் டோக்கிலோ ஒலிம்பிக் நாளை தொடங்குகிறது. கொரோனா 2வது அலைக்கு மத்தியில் மிகுந்த எச்சரிக்கையுடன் போட்டிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் பல்வேறு நாடுகளின் விளையாட்டு வீரர்கள் மற்றும் அணி நிர்வாகிகளை கொரோனா விட்டுவைக்கவில்லை.

நேற்று வரை டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் 75 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் 2 தடகள வீரர்கள் உள்ளிட்ட 12 பேருக்கு கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டிருப்பதாக அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதனையும் சேர்த்து டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 87 ஆக அதிகரித்துள்ளது. அவர்கள் அனைவரையும் தனிமைப்படுத்தி மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அதோடு மட்டுமல்லாமல் அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

ஒலிம்பிக் கிராமத்தில் நாளுக்குநாள் தொற்று அதிகரிக்கும் நிலையில், தடுப்புப் பணிகளும் விரைவுப்படுத்தப்பட்டுள்ளன. ஒலிம்பிக் போட்டி நடக்க உள்ள டோக்கியோவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் அங்கு அதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே கொரோனாவால் கடைசி நேரத்தில் கூடஒலிம்பிக் ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளதாக ஒலிம்பிக் கமிட்டி குழு கூயிருந்தது குறிப்பிடத்தக்கது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP