1. Home
  2. தமிழ்நாடு

பெட்ரோல், டீசல் விலை மேலும் குறைய வாய்ப்பா ?

பெட்ரோல், டீசல் விலை மேலும் குறைய வாய்ப்பா ?

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ,சவுதி அரேபியா கச்சா எண்ணெய் விலை கணிசமாக குறைந்து வருகிறது , இதனால் கச்சா எண்ணெய் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்துக்கொள்கின்றன. அந்த வகையில், பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணங்களால் கச்சா எண்ணெய் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதனால், கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து மாற்றம் எதுவும் இல்லாமல் ஒரு லிட்டர் ரூ.73.02 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் இருந்து மாற்றம் எதுவும் இல்லாமல் ஒரு லிட்டர் ரூ.66.48ஆகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

newstm.in

Trending News

Latest News

You May Like