1. Home
  2. தமிழ்நாடு

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா ? அமைச்சர் விளக்கம் !!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா ? அமைச்சர் விளக்கம் !!


கொரோனா பரவலை தடுக்க இந்தியா முழுவதும் ஊரடங்கு 2 ம் கட்டமாக நீடிக்கப்பட்டு அமலில் உள்ளது. இந்நிலையில் மதுரை அரசரடி மாநகராட்சி அலுவலகத்தில் தூய்மைப் பணியாளர்களை கெளரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதில் பங்கேற்ற அமைச்சர் செல்லூர் ராஜி , தூய்மை பணியாளர்களுக்கு மாலை மற்றும் சால்வை அணிவித்து மரியாதை செய்தார். மேலும் அவர்களது குடும்பத்திற்கு தேவையான மளிகை பொருட்களையும் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ;

கொரோனாவால் மருத்துவர்கள் பாதிப்புக்கு உள்ளாவது துரதிஷ்டவசமானது என்றும் அதை கூட ஸ்டாலின் அரசியலாக்குகிறார் என்றும் சாடினார். மதுரையின் 12 அம்மா உணவகத்திலும் இலவச உணவுக்கான பணத்தை அதிமுக சார்பில் முன் கூட்டியே செலுத்தி விட்டதாக கூறிய அமைச்சர், ஊரடங்கு நீடிக்கப்படுமா என்று கேள்வி எழுப்பிய போது , ஊரடங்கு  நீட்டிப்பது குறித்து மாவட்ட நிர்வாகங்களின் அறிக்கையை , அதற்கென நியமிக்கப்பட்ட குழு பெற்று வருவதாகவும், அதற்கேற்ப முடிவுகள் எடுக்கப்படும் என்றும் கூறினார்.

Newstm.in

Trending News

Latest News

You May Like