தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா. ? முதலமைச்சர் தெரிவித்த சூசக பதில்...

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா. ? முதலமைச்சர் தெரிவித்த சூசக பதில்...

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா. ? முதலமைச்சர் தெரிவித்த சூசக பதில்...
X

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திருச்சி சென்றார். அங்கு, பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்த அவர் , பின்னர் அதிகாரிகளுடன் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது : தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்த வருகிறது. குடிமராமத்து பணிகளுக்காக ரூ.498 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், நபார்டு வங்கி உதவியுடன் பல்வேறு நீர் பாசன திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. ஊரடங்கினால் பாதிக்கப்பட்டுள்ள தொழில்முனைவோருக்கு தேவையான நிவாரணங்களை மத்திய அரசிடம் கேட்டுள்ளோம்.

இந்த கோரிக்கைகளின் அடிப்படையில் 10 சதவீத நிதியை மத்திய அரசு வழங்கியுள்ளது. திருச்சியில் நவீன உணவு பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திருச்சி சிப்காட்டில் ரூ.200 கோடியில் தொழில் பூங்கா அமைக்கப்படும்.

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா..? என்பது குறித்து திங்கட்கிழமைக்கு பிறகு தெரிய வரும். ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மத்திய அரசின் முடிவை பொறுத்து தமிழகத்தில் முடிவு எடுக்கப்படும், எனத் தெரிவித்தார்

Newstm.in

Next Story
Share it