முதலமைச்சருக்கு கொரோனா வருமா ? - அமைச்சர் செல்லூர் ராஜு கணிப்பு !

முதலமைச்சருக்கு கொரோனா வருமா ? - அமைச்சர் செல்லூர் ராஜு கணிப்பு !

முதலமைச்சருக்கு கொரோனா வருமா ? - அமைச்சர் செல்லூர் ராஜு கணிப்பு !
X

முதலமைச்சருக்கு கொரோனா வராது; வந்தாலும் சரியாகிவிடும் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.  

மதுரையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், மதுரையில் எல்லோருடைய கோரிக்கைகளையும் மாவட்ட நிர்வாகம் உன்னிப்பாக கவனித்து வருகிறது.  மதுரையில் கொரோனா பரிசோதனை அதிகப்படுத்தப்பட்டுள்ளது.

வெளி மாவட்டங்களில் இருந்து அதிகமாக அளவில் மக்கள் மதுரைக்கு வருகின்றனர். இதனால் மாவட்ட எல்லைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன என்றார்.

மேலும் முதலமைச்சர் பழனிசாமி எச்சரிக்கையுடன் களத்தில் பணியாற்றி வருகிறார். அனைவரையும் உடல்நலத்தை பாதுகாக்கும்படி அவர் அன்புடன் அறிவுறுத்துவார். முதல்வருக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஜெயலலிதா இருந்தால் எப்படி கருணையோடும் பாசத்தோடும் இருப்பாரோ அதுபோல எடப்பாடி பழனிசாமி உள்ளார்.


முதல்வர் எங்களுக்கு வழிகாட்டியாய், முன்மாதிரியாய் உள்ளவர். சக அமைச்சர்கள் மீது அன்பும் பாசமும் கொண்ட முதல்வர், துணை முதல்வர் கிடைத்துள்ளனர். எல்லோரின் முதல்வருக்கு கொரோனாலாம் வராது. வந்தாலும் அது உடனே போய்விடும் என்றும் அவர்  தெரிவித்தார்.

newstm.in 

Next Story
Share it