ஏடிஎம் கார்டு, கிரெடிட் கார்டு பரிமாற்றக் கட்டணம் ஆகஸ்டு மாதம் முதல் உயர்வா..?

 | 

ஏடிஎம் பணப் பரிமாற்றத்துக்கான கட்டணத்தை 15 ரூபாயில் இருந்து 17 ரூபாயாகவும், பணமல்லா நடவடிக்கைகளுக்கான கட்டணத்தை ஐந்து ரூபாயில் இருந்து ஆறு ரூபாயாகவும் ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது.

இதேபோல் ஒரு வாடிக்கையாளர் தனது வங்கி ஏடிஎம்களில் ஒரு மாதத்துக்கு 5 முறைதான் இலவசப் பணப் பரிமாற்றம் செய்ய முடியும்.

பெருநகரமாக இருந்தால் 3 முறையும், மற்ற பகுதிகளில் 5 முறையும் மட்டுமே மற்ற வங்கிகளில் இலவசப் பரிமாற்றம் செய்ய முடியும். இந்த வரம்புக்கு மேல் உள்ள ஒவ்வொரு பரிமாற்றத்துக்கும் 20 ரூபாய் என இப்போதுள்ள கட்டணத்தை 2022 ஜனவரி 1 முதல் 21 ரூபாயாக ரிசர்வ் வங்கி உயர்த்த உள்ளது.

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP