1. Home
  2. தமிழ்நாடு

கிணற்றில் விழுந்த யானையை போராடி மீட்ட வனத்துறை.. பின்னர் நடத்து தான் விபரீதம்..!

கிணற்றில் விழுந்த யானையை போராடி மீட்ட வனத்துறை.. பின்னர் நடத்து தான் விபரீதம்..!


விவசாய தோட்டத்தில் விழுந்த பெண் யானையை வனத்துறையினர் மீட்டதும், வெளியேவந்து இடித்து தள்ளியதால் பெரும் பதற்றம் உண்டாது.

தமிழகம் - கர்நாடக எல்லையான ஹானூர் வனத்தை ஒட்டி சென்னேகவுடா தொட்டி கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் காட்டுயானைகள் புகுந்து விவசாயப் பயிர்களை சேதப்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்த வண்ணம் இருந்தன.

இந்நிலையில், வனத்தில் இருந்து வெளியேறி, விவசாய நிலைத்தில் புகுந்த 10 வயதுள்ள பெண் யானை அங்குள்ள குறைவான ஆழமுடைய கிணறு ஒன்றில் தவறி விழுந்தது. அவ்வழியாக சென்ற கிராமமக்கள் யானை கிணற்றில் தத்தளிப்பதை பார்த்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த வனத்துறையினர் கிராம மக்கள் உதவியுடன் யானையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

கிணற்றில் தத்தளித்த யானையை கயிறு கட்டி ஜேசிபி மூலம் இழுக்கும் முயற்சி பயனிக்கவில்லை. அதனைத் தொடர்ந்து ஜேசிபி இயந்திரம் உதவியுடன் கிணற்றின் பக்கவாட்டு தரைப்பகுதியை இடித்து சரிவு ஏற்படுத்தினர். அதனைத் தொடர்ந்து யானை மெதுவாக மேலே ஏறி வந்தது. 

கோபத்துடன் இருந்த யானை எதிரே இருந்த ஜேசிபியை முட்டி தள்ளிவிட்டு வனத்தை நோக்கி சென்றது. யானை மீட்பு பணியை பார்க்க வந்த மக்கள் இருக்கும் இடத்தை நோக்கி யானை சென்றதால் மக்கள் தலைதெறிக்க ஓடினர்.

newstm.in 

Trending News

Latest News

You May Like