பள்ளிக்கு ஏன் வரவில்லை.. ஆசிரியர்கள் திட்டியதால் மாணவி எடுத்த விபரீத முடிவு!!

 | 

புதுச்சேரி, பூமியான்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராமு. இவரது மகள் ஸ்வேதா. இவர் கதிர்காமம் அரசுப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து புதுச்சேரியில் பள்ளிகள் கடந்த நவம்பர் மாதம் முதல் நேரடி வகுப்புகள் துவங்கியது. உடல் நலக்குறைவு காரணமாக ஸ்வேதாக பள்ளிக்குச் செல்லாமல் இருந்துள்ளார்.

இதையடுத்து ஸ்வேதாகவை ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவழைத்துள்ளனர். அப்போது பள்ளிக்கு ஏன் வரவில்லை என கூறி மாணவியை ஆசிரியர்கள் திட்டியதாகக் கூறப்படுகிறது.

Girl-suicide

இதனால் மனவேதனையடைந்த ஸ்வேதா வீட்டிற்குச் சென்று கழிவறையில் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது தாயார் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தார்.

பின்னர், அங்கு வந்த போலீசார் மாணவியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தர். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார் பள்ளி ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP