பிக்பாஸ் வீட்டில் இருந்து இன்று வெளியேறப்போகும் போட்டியாளர் யார்?
பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தற்போது பிரபல நடிகர் விஜய் சேதுபதி வழங்கி வருகிறார். 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்தச் சீசனில் நடிகர் ரஞ்சித் ஒருவரை தவிர சின்னத்திரை பட்டாளங்கள் களமிறங்கியது. “ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு” என மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்த ரசிகர்களுக்கு இந்தச் சீசன் ஆரம்பம் முதலே அதிருப்தியை கொடுத்து வந்தது.
உள்ளே நுழைந்த 18 போட்டியாளர்களுக்கு டஃப் கொடுக்கப்போகிறோம் என்று அதிரடியாக 6 வைல்ட் கார்ட் என்ட்ரியை களமிறக்கினர். ஆனால் அப்போதும் ஆட்டத்தில் எந்த ஒரு சுவாரஸ்யமும் எஞ்சவில்லை. இதுவரை வீட்டிலிருந்து ரவீந்தர், தர்ஷா, அர்னவ், சுனிதா, ரியா, வர்ஷினி, சிவகுமார், ஆனந்தி, சாச்சனா என அடுத்தடுத்து குறைவான வாக்குகளைப் பெற்று வீட்டிலிருந்து வெளியேறினர். ஆனாலும் வீட்டில் கும்பல் தான் அதிகமாக இருக்கிறதே தவிர மக்களுக்குச் சுவாரஸ்யத்தை ஏற்றும் வகையில் எந்த ஒரு கண்டென்ட்டும் வெளிவரவில்லை. கடந்த வாரங்களில் நடந்த “பொம்மை டாஸ்க்”, “டெவில் Vs ஏஞ்சல்” என்று சேலஞ்சிங்கான டாஸ்க் கொடுக்கப்பட்ட போதிலும் அதனை எவ்வளவு சுவாரஸ்யம் குறைவாக விளையாட முடியுமோ அவ்வளவு சுவாரஸ்யம் குறைவாக விளையாடி ரசிகர்களைக் கடுப்பேற்றினர்.
ஆனால் இந்த வாரம் கொடுக்கப்பட்ட “தொழிலாளி Vs முதலாளி” டாஸ்க் எதிர்பார்த்ததை விட நன்றாகச் சென்றது என்றே கூறலாம். வீட்டில் சுவாரசியமான கன்டென்ட் கொஞ்சம் கொஞ்சம் எட்டிப்பார்க்கிறது. போட்டியாளர்களும் நாட்கள் நெருங்க நெருங்க ஆட்டத்தைப் புரிந்து கொண்டு விளையாட ஆரம்பித்துள்ளனர். நேற்று நடந்த வீக் எண்ட் எபிசோடில் ஆரம்பமே தடாலடியாக எவிக்ஷனுடன் தொடங்கினார் விஜய் சேதுபதி. வீட்டில் இருக்கும் போட்டியாளர்களிள் இருந்து ஒரு நபர் வெளியேற்றப்பட்டார், அந்த நபர் சத்யா. கண்ணீரும், அன்பும் பொங்க சத்யா பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
இந்த வாரம் எவிக்ஷன் சனிக்கிழமையே முடிந்துவிட்டது என்று நினைக்க வேண்டாம், ட்விஸ்ட் இருக்கு. 70 நாட்கள் கடந்துவிட்டது, ஆனால் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களின் எண்ணிக்கை அதிகமாகத் தான் உள்ளது, இதைக் கருத்தில் கொண்டு இந்த வாரம் டபுள் எவிக்ஷன் நடக்கவுள்ளது. அதன்படி, இந்தவாரம் சத்யாவிற்கு பிறகு வீட்டிலிருந்து வெளியேறப்போகும் அந்தப் போட்டியாளர் யார் தெரியுமா? அவர் வேறு யாரும் இல்லை தர்ஷிகா தான்.