ரஜினிகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டில் விடுத்தது யார் தெரியுமா! தேடிப்பிடித்த போலீஸ்!!

ரஜினிகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டில் விடுத்தது யார் தெரியுமா! தேடிப்பிடித்த போலீஸ்!!

ரஜினிகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டில் விடுத்தது யார் தெரியுமா! தேடிப்பிடித்த போலீஸ்!!
X

சென்னையில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது கடலூரைச் சேர்ந்த 14 வயது சிறுவன் என்பது தெரியவந்துள்ளது.

சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்களுடன் அங்கு சோதனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது. இந்த சோதனையின் முடிவில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக விசாரணை நடத்தி வந்த தேனாம்பேட்டை போலீஸார், மிரட்டல் விடுத்த நபர் யார் எனத் தேடி வந்தனர்.

இந்நிலையில் கடலூர் மாவட்டம் நெல்லிகுப்பத்தை சேர்ந்த 8ஆம் வகுப்பு மாணவன் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக தெரியவந்துள்ளது. 108 அவசர தொலைபேசி அழைப்புக்கு தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்திருந்தார். தனது போனில் அழைப்புகள் எதுவும் போகாத நிலையில் 108க்கு மாணவன் அழைத்துள்ளார். மாணவனுக்கு சற்று மனநலம் பாதிப்பு ஏற்பட்டது என விசாரணையில் தெரியவந்துள்ளது. 

newstm.in

Next Story
Share it