குடும்பத்துடன் கடலில் குளிக்கும் போது , திடீரென பெரிய அலை !! 1 ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு ஏற்பட்ட சோகம்..

X

நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள சபாநாயகர் தெருவை சேர்ந்த ஹாஜாமைதீன்(32) என்பவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஹனிதா (25) என்ற மனைவியும்,  அஃப்ரா (6) என்ற மகளும் உள்ளனர்.

அஃப்ரா சீர்காழியிலுள்ள பள்ளியில் 1ஆம் வகுப்பு படித்து வருகிறார். தாய் ஹனிதா, அஃப்ரா மற்றும் குடும்பத்துடன் சீர்காழி அருகேயுள்ள கூழையார் கடலில் அனைவரும் ஒன்றாக சேர்ந்து நேற்று மகிழ்ச்சியுடன் குளித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக பெரிய அலை வந்து அஃப்ராவை கடலுக்குள் இழுத்து சென்று விட்டது. இதைக்கண்டு பதறிப்போன அவரது தாய் மற்றும் உறவினர்கள் கடலுக்குள் சிறிது தூரம் சென்று தேடி பார்த்தனர்.

ஆனால் அவர் கிடைக்கவில்லை. இதனால் கதறி அழுத குடும்பத்தினர்  உடனடியாக புதுப்பட்டினம் போலீசாருக்கு தகவலளித்தனர். பின்னர் போலீசார் மற்றும் சீர்காழி தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அங்குள்ள மீனவர்களின் உதவியுடன் அஃப்ராவின் உடலை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும், இரவு நேரம் ஆகிவிட்டதால் தேடுதல் பணி நிறுத்தப்பட்ட நிலையில், இன்று மீண்டும் தேடுதல் பணி மீண்டும் தொடர்ந்துள்ளது.

Newstm.in

Next Story
Share it