என்ன ஆச்சு கோவையில்..? ஒரே நாளில் நடுத்தெருவில் நிற்கும் ஐ.டி ஊழியர்கள்..!

அமெரிக்காவைச் சார்ந்த Focus Edumatics எனும் தனியார் IT நிறுவனம் கோவை ஆர் எஸ் புரம் மற்றும் சுங்கம் பகுதியில் செயல்பட்டு வந்தது.இந்த நிறுவனத்தில் நூற்றுக்கணக்கான பணியாளர்கள் பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில் எந்தவித முன் அறிவிப்பும் இன்றி நிறுவனம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஊழியர்கள் யாரும் இனி யாரும் பணிக்கு வரவேண்டாம் என மெயில் அனுப்பி உள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடை ஊழியர்கள் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மூன்று மாத கால சம்பள தொகையை பெற்றுத் தர வேண்டும், 5 ஆண்டுகளுக்கும் மேல் பணி புரிந்து வருபவர்களுக்கு settlement, gratuity உள்ளிட்டவற்றைப் பெற்றுத் தர வேண்டும் என கோரி அந்நிறுவனத்தில் பணியாற்றிய இளைஞர்கள் பலரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தனர்.
ஃபோக்கெஸ் எடுமாட்டிக்ஸ் நிறுவனத்தில் வேலை செய்து வந்த நந்தகுமார் என்ற ஊழியர் அளித்த பேட்டி ஒன்றில் கூறுகையில், என் பெயர் நந்தகுமார். நான் குவாலிட்டி டிபார்ட்மெண்டில் வேலை செய்து வந்தேன். இந்த கம்பெனி பார்த்தீர்கள் என்றால், 2010ம் ஆண்டு ஆரம்பித்தது. 15 வருடங்களாக இயங்கி வருகிறது. திடீரென கடந்த வெள்ளிக்கிழமை எங்களுக்கு ஒரு கால் வந்தது.. மதியம் 12 மணி வரை ஐடி சர்வீஸ்க்காக shutdown பண்றோம் என்று சொல்லித்தான் ஆரம்பித்தார்கள்..
வொர்க்ஃபுரம் எடுத்துக்கொள்ளுங்கள்.. இல்லை என்றால் லீவு எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறினார்கள்.. இதனால் எல்லாருமே வீட்டிற்கு போய் வேலை செய்தோம்.. சனி மற்றும் ஞாயிறு எப்போதுமே லீவு தான்.. அதற்கு பிளான் பண்ணி நாங்கள் ஊருக்கு போயிருந்தோம்.. ஆனால் சனிக்கிழமை இரவு 8.30 மணிக்கு மீட்டிங் ஏற்பாடு செய்திருந்தார்கள்.. அவசர மீட்டிங் என்று கூறி ஏற்பாடு செய்திருந்திருக்கிறார்கள். அதன்பிறகு 9.15க்கு மெயில் வருகிறது.. உடனடியாக நிறுவனம் shutdown செய்யப்படுவதாக கூறினார்கள். அதாது கோவையில் உள்ள ஃபோக்கெஸ் எடுமாட்டிக்ஸ் நிறுவனக்கிளை ஒரே நாளில் நிரந்தரமாக மூடப்படுவதாக மெயில் வந்தது.. கோவையில் உள்ள எல்லா ஊழியர்களும் உடனடியாக பணி நீக்கம் செய்யப்படுவதாகவும் கூறினார்கள்.. ' எங்களுக்கு ஒரே நாளில் வேலை போய்விட்டது.. அந்த நிறுவனம் எங்களுக்கு அணுபவ சான்றிதழ், சம்பளம், கிராஜூவிட்டி, மெர்டனிடிட்டி லீவில் உள்ளவர்களுக்கு சம்பளம் என எதுவுமே வரவில்லை.. ஹெச்ஆர் ஒன்ற பெயரில் அவர்களுக்கு சாதகமாக அப்ளிகேசன் ஒன்று உள்ளது. அதில் வேலை செய்யும் ஊழியர்கள் எல்லாம் தலைமறைவாகிவிட்டதாக கூறியிருக்கிறார்கள்.. நாங்கள் தலைமறைவாகவில்லை. வெள்ளிக்கிழமை வரை ஒன்றாகவே வேலை செய்தோம்..
சட்டப்படி நிறுவனத்தை மூடுவதாக இருந்தால் 3 மாதம் முன்பே எடுத்திருக்க வேண்டும். முறையாக நோட்டீஸ் தர வேண்டும்.. ஊழியர்களுக்கு ஊதியம் உள்பட அனைத்து விஷயங்களையும் சரியாக தந்திருக்க வேண்டும்.. எதுவுமே இல்லாமல் ஒரே நாளில் மூடிவிட்டு வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள்.. ஒன்றாம் தேதி சம்பளம் வரும் என்று நம்பிக்கொண்டிருப்பவர்கள் நிலைமையை நினைத்தால் தான் கவலையாக உள்ளது என்றார். ஒட்டுமொத்தமாக சென்னை, கோவை, பெங்களூர் என 2000 ஊழியர்கள் வேலையை இழந்துள்ளதாக ஊழியர்கள் தெரிவித்தனர். லோன், இஎம்ஐ என எல்லாமே இந்த நிறுவனத்தை நம்பி வாங்கியவர்கள் இனி என செய்ய போகிறோம் என்ற வருத்ததில் உள்ளார்கள்.