1. Home
  2. தமிழ்நாடு

சசிகலா வெளியே வந்தால் என்ன ஆகும்? அமைச்சர்களின் மாறுபட்ட கருத்துகள்!!

சசிகலா வெளியே வந்தால் என்ன ஆகும்? அமைச்சர்களின் மாறுபட்ட கருத்துகள்!!


சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தால் என்ன நடக்கும் என்பது குறித்து அதிமுக அமைச்சர்கள் இருவர் வெவ்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

சசிகலாவின் சிறை தண்டனை ஆறு மாதங்களில் முடிய உள்ளது. ஆனால் அவர் ஆறு மாதங்களுக்கு முன்னதாகவே விடுதலை செய்யப்படுவார் என்ற கருத்தும் நிலவுகிறது. இந்நிலையில் அவர் வெளியே வந்தால் அதிமுகவில் என்ன மாதிரியான தாக்கம் ஏற்படும் என்று பல்வேறு தரப்பினர் பேசத் தொடங்கிவிட்டனர். ஆனால் கட்சியினரின் கருத்து என்ன என்பதில் மக்கள் ஆர்வமாக உள்ளனர். இந்நிலையில் நாகை மாவட்டம் செருதூர் மீனவ கிராமத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஓ.எஸ்.மணியனிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பதில் அளித்த அவர், சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தால் அதிமுகவை யார் வழி நடத்துவது என்பதை கட்சியின் தலைமைதான் முடிவு செய்யும் என்று கூறினார். 


இதனிடையே இதுகுறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார் அதிமுகவிலோ, ஆட்சியிலோ சசிகலாவுக்கு இடமில்லை என்று கூறியுள்ளார். ஓ.எஸ்.மணியன் கூறியது அவரது தனிப்பட்ட கருத்து என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இதன் மூலம் சசிகலா வெளியே வந்தால் அதிமுகவில் பல்வேறு மாற்றங்கள் நிகழும் என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.

newstm.in

Trending News

Latest News

You May Like