1. Home
  2. தமிழ்நாடு

கொரோனாவை தடுக்க இயற்கை முறையில் என்ன செய்யலாம் !! இதோ ஐடியா !!

கொரோனாவை தடுக்க இயற்கை முறையில் என்ன செய்யலாம் !! இதோ ஐடியா !!


கொரோனா வைரஸ் வராமல் தடுக்க இயற்கையான முறையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன செய்யலாம் என்று யோகா மற்றும் இயற்கை மருத்துவர் இந்திராதேவி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது ;

நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தில் பல்வேறு முறைகள் உள்ளன. எளிய யோகா பயிற்சிகள், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய உணவு முறைகள் உள்ளன.

மன அழுத்தத்தை குறைத்து ஹார்மோன்களை சீராக்குவதால் நம் உடலில் இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தியை யோகா பயிற்சி அதிகரிக்கச் செய்கிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் 30 நிமிடம் யோகா பயிற்சி மேற்கொண்டால் போதுமானது.

தடாசனம், கட்டி சக்கராசனம், திரிகோனாசனம், வஜ்ஜிராசனம், கோமுகாசனம், மேருவக்ராசனம், மக்கராசனம் போன்ற யோகாசனங்களை செய்ய வேண்டும். கொரோனா போன்ற பலநோய் தொற்று முதலில் தொண்டை சுவாச பகுதிகளை தாக்கும் என்பதால் மூச்சு பயிற்சி எனப்படும் பிராணாயாமம் செய்ய வேண்டும்.

இதனால் சுவாசம் சீராக்கி பிராண வாயு அதிகரித்து நுரையீரல் திறனை வலுப்பெறும். நாடி சுத்தி பிராணாயாமம் என்பது வலது நாசியினை மூடி, இடது நாசி வழியாக மூச்சை உள்ளிழுத்து பின் இடது நாசியை மூடி வலது நாசி வழியாக மூச்சை வெளியிட வேண்டும்.

அதேபோல் முற்றிலும் எதிர்மறையாக செய்ய வேண்டும். பிராமரி பிராணாயாமம் என்பது ஆள்காட்டி விரலை நீட்டி காதுகளில் வைத்துக் கொள்ள வேண்டும். அதன்பிறகு மூச்சை ஆழமாக உள்ளிழுத்து வெளியிடும் போது தேனீக்கள் சத்தம் போடுவது போல் வாயை மூடி சத்தம் எழுப்ப வேண்டும்.

இந்த பிராமரி மூச்சு பயிற்சி தினமும் செய்வதினால் நம் உடலில் அதிர்வுகள் ஏற்படுகிறது. இதனால் தைமஸ் சுரப்பி செயல்பாடு அதிகரிக்கிறது. வெள்ளை அணுக்கள் அதிகம் உடலில் உற்பத்தி ஏற்பட்டு அதனால் டி செல்ஸ் அதிகரிக்கப்படுவதால் நோய் தொற்று வராமல் இருக்க கேடயமாக உடலை பாதுகாக்கிறது.

பொதுவாக யோகாசனம் பிராணாயாமம் தியானம் செய்வதால் மூளையில் இருந்து ஆரம்பம் ஆகும் வாக்ஸ் நரம்பு உடலில் உள்ள முக்கியமான உறுப்புகளான நுரையீரல், இதயம், வயிறு பகுதிகளுக்கு சென்றடைவதால் அந்த உறுப்புகளின் செயல்பாடுகள் நன்றாக தூண்டப்படுகிறது.

இதனால் மனஅழுத்தம் குறைந்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது. மேலும் கொரோனா தொற்று பரவாமல் இருக்க இயற்கை மருத்துவ முறைகளான அடிக்கடி சூடான தண்ணீர் குடிக்க வேண்டும். சிறிதளவு உப்பு மற்றும் மஞ்சள் கலந்த மிதமான வெந்நீரில் காலை மற்றும் மாலை இருமுறை வாய் கொப்பளிக்க வேண்டும்.

10 முதல் 15 நிமிடங்கள் தினமும் துளசி அல்லது நொச்சி, வேப்பிலை இவற்றில் ஏதேனும் ஒன்றுடன் மஞ்சள் பொடி மற்றும் உப்பு கலந்து நீரால் ஆவி பிடிக்க வேண்டும். தினமும் 15 முதல் 20 நிமிடம் வரை காலை 7.30 மணிக்குள் அல்லது மாலை 5 முதல் 6 மணிக்குள் சூரிய குளியல் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்த முறையை தினமும் கடைபிடித்தால் கொரோனா தொற்று வராமல் பாதுகாத்துக் கொள்ள முடியும். அதனுடன் இயற்கை பானங்களை தயாரித்து பெரியவர்கள் 250 மி.லி, சிறியவர்கள் 100 மி.லி என ஒரு நாளைக்கு இரண்டு வேளை குடிக்க வேண்டும்.

நெல்லி ஜூஸ்: நாட்டு நெல்லிக்காய்- 50 மி.லி, துளிசி 50 மி.லி, எலுமிச்சை 5 மிலி, இஞ்சி 10 மிலி, மஞ்சள் பவுடர் 1/4 டீ ஸ்பூன், தண்ணீர் 150 மிலி அரைத்து ஜூஸ் மாதிரி சாப்பிட வேண்டும். பெரியவர்கள் 250 மிலி, சிறியவர்கள் 100 மிலி சாப்பிட வேண்டும்.

கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் தினமும் சாப்பிட வேண்டும். மற்றவர்கள் வாரத்தில் இரண்டு நாட்கள் எடுத்துக் கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொரோனா வைரஸ் வராமல் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

இஞ்சி, துளசி, மிளகு, தண்ணீர் 250 மிலி எடுத்துக் கொண்டு அதனுடன் மஞ்சள் தூள், அதிமதுரம் ஆகியவற்றை கொதிக்க வைத்து வடிகட்ட பெரியவர்கள் 50 மிலியும், சிறியவர்கள் 20 மிலியும் தினம் இரண்டு முறை குடிக்க வேண்டும்.

அன்னாசி, ஆரஞ்சு, சாத்துக்குடி பழச்சாறுகளையும், கீரை வகைகள், கேழ்வரகு, சிறுதானியங்கள், நட்ஸ், உலர் பழங்கள் அதிகம் சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதன் கொரோனா வைரஸ் வராமல் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

இயற்கை மோர்: இயற்கையான முறையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய மோர் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் இஞ்சி, எலுமிச்சை, துளசி, மிளகு, சீரகம், பெருங்காயம், கொத்தமல்லி, கருவேப்பிலை உள்ளிட்ட பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளது.

இது யோகா மற்றும் இயற்கை மருத்துவ முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த மோர் உடலில் நீரிழப்பு தன்மை சீர் செய்ய உதவுகிறது.  இந்த இயற்கை மூலிகை மோரில் உள்ள லாக்டோ பெர்ரின் என்ற பால் புரதம் வைரஸ்களை அழித்து உடலை வைரஸ் நோய்களிலிருந்து பாதுகாக்கிறது. வயதானவர்களும் இந்த மோரை எடுத்துக் கொள்ளலாம். இதில் உள்ள நுண்ணியிரிகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது இவ்வாறு இயற்கை மருத்துவர் இந்திரா தேவி கூறினார்.

Newstm.in

Trending News

Latest News

You May Like