திருமணநாள் துயரம் : கணவர் இறந்ததை மொபைலில் பார்த்து கதறிய மனைவி! 

 | 

கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், கேரளாவில் இறந்த தனது கணவரின் இறுதி சடங்கை அவரது மனைவி துபாயில் இருந்து வீடியோ கால் மூலம் பார்த்து கதறி அழுத சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவை சேர்ந்த ரீஜித் - பிஜிமோல் தம்பதியினருக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். ரீஜித் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர். இந்நிலையில், குடும்ப வறுமை பிஜிமோல் துபாய்க்கு வேலைக்காக சென்றார். ரீஜித் - பிஜிமோல் திருமண நாளான நேற்று முன்தினம் உறவினர்களிடம் இருந்து பிஜிமோலுக்கு தொலைபேசி அழைப்பு ஓன்று வந்துள்ளது. அதில், கணவர் ரீஜித் இறந்துவிட்டதாக உறவினர்கள் கூறியுள்ளனர். கணவர் இறந்ததை கேட்டு அதிர்ச்சியில் உறைந்துபோன பிஜிமோல் விமானங்கள் ஏதும் இயங்காததால் கணவரின் உடலை வீடியோ கால் மூலம் பார்த்து கதறி அழுதுள்ளார்.


வீடியோ காலில் அலுத்துக்கொண்ட இறந்த பிஜிமோலுக்கு ஆறுதல் கூட சொல்ல முடியாமல் அங்கிருந்தவர்கள் தவித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP