கொரோனா பரிசோதனை முடிவுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இணையதளம் வசதி...

கொரோனா பரிசோதனை முடிவுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இணையதளம் வசதி...

கொரோனா பரிசோதனை முடிவுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இணையதளம் வசதி...
X

மதுரையில் கொரோனா தொற்று நோய் வேகமாகப் பரவுகிறது. தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த முடியாமல் மாவட்ட நிர்வாகமும், மாநராட்சி நிர்வாகமும் திணறுகின்றன. ஆனால், இந்த தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் கடந்த காலத்தை விட மிக விரைவாக குணமாகுவதால் மக்கள் பதற்றமில்லாமல் உள்ளனர்.

தீவிர பாதிப்புள்ள நோயாளிகள் மட்டுமே அரசு மருத்துவமனை மற்றும் மற்ற கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்றனர். நோய் அறிகுறி இல்லாத மற்றும் தீவிர பாதிப்பு இல்லாத மற்ற நோயாளிகள் மருத்துவர்கள் ஆலோசனை பேரில் வீடுகளிலே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெறுவதற்கு மாநகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

இந்நிலையில் கொரோனா' பரிசோதனை செய்வோருக்கு உடனுக்குடன் அவர்கள் பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. கடந்த 3 வாரத்திற்கு முன் வரை மதுரை மாவட்டத்தில் 250 முதல் 300 பேர் வரை மட்டுமே தினமும் பரிசோதனைகள் நடத்தப்பட்டன.

ஆரம்பத்தில் 2 நாளில் தெரிவிக்கப்பட்ட இந்த முடிவுகள் தற்போது 4 நாட்களாகிவிடுகிறது. மிகத் தாமதமாக தெரிவிப்பதால் தொற்று இருக்கிறவர்கள் மூலம் மற்றவர்களுக்கு இந்த தொற்றுநோய் எளிதாக பரப்பிவிடுகிறது.

பரிசோதனை செய்தவர்களும், முடிவு தெரியும் வரை பதற்றத்துடன் வீடுகளில் ஒவ்வொரு நாளையும் கழிக்க வேண்டிய உள்ளது. தற்போது ஒரு நாளைக்கு 1500 முதல் 2000 பேர் வரை பரிசோதனை செய்யப்படுகிறது.

இந்த முடிவுகளை உடனுக்குடன் தெரிவிக்க வலியுறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து பரிசோதனை முடிவுகளை உடனுக்குடன் அறிய மதுரை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இணையத்தில் வசதி ஏற்படுத்தியுள்ளது.

Newstm.in

Next Story
Share it