மாஸ்க் அணிந்தால் போதுமா.? - காய்கறி வாங்கிவிட்டு வீட்டுக்கு வந்தவுடன் இதை செய்யுங்கள்..!

மாஸ்க் அணிந்தால் போதுமா.? - காய்கறி வாங்கிவிட்டு வீட்டுக்கு வந்தவுடன் இதை செய்யுங்கள்..!

மாஸ்க் அணிந்தால் போதுமா.? - காய்கறி வாங்கிவிட்டு வீட்டுக்கு வந்தவுடன் இதை செய்யுங்கள்..!
X

கொரோனா அச்சத்தால் மக்கள் பாதுகாப்பாக இருக்க வெளியே வரும் நபர்கள் முகக் கவசங்கள் அணிந்து கொண்டுதான் வரவேண்டும் என அரசு வலியுறுத்தி வருகிறது. சென்னை, திருப்பூர் உள்ளிட்ட மாநகராட்சி நிர்வாகங்கள் மாஸ்க் அணியாமல் வெளியே வந்தால் அபராதம் விதிக்கிறது. இதனால் பல இடங்களில் மக்கள் மாஸ்க் அணிந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

மாஸ்க் அணிவது உடன் இன்னும் சில வழிமுறைகளை கூடுதலாக நாம் கடைப்பிடிக்க வேண்டும். உதாரணத்திற்கு மளிகை கடை காய்கறி கடை போன்றவற்றிற்கு சென்று வீடு திரும்பும் நபர்கள் தங்கள் வீட்டிற்குள் நுழையும் முன் கைகளை சனிடைசர் அல்லது சோப்பு போட்டு நன்றாக கழுவ வேண்டும்.

அதன் பிறகு காய்கறிகளை சுடுதண்ணீரில் போட்டு கழுவ வேண்டும் எனவும் மருத்துவர்கள் கூறுகின்றனர். 


ஏனென்றால் பல இடங்களில் கிருமிநாசினிகள் தெளித்து கொண்டிருக்கிறார்கள் இந்த கிருமிநாசினிகள் காய்கறி மீது பட்டிருக்கலாம். அதனால்தான் இதை நாம் தவறாமல் சுடு தண்ணீரில் கழுவ வேண்டும். 

மாஸ்க் அணிந்து கொண்டிருக்கும் போது கைகளை முகத்திற்கு, காது பக்கம் எடுத்துச் செல்ல வேண்டாம். பலருக்கு கிருமிநாசினிகள் இருந்து அலர்ஜி ஏற்படலாம் இவற்றை தடுக்கவே இதனை நாம் பின்பற்ற வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

newstm.in 


 

Next Story
Share it