கோவில்களை விடுவிக்க தொடர்ந்து செயல்படுவோம்! சத்குரு பேட்டி!

கோவில்களை விடுவிக்க தொடர்ந்து செயல்படுவோம்! சத்குரு பேட்டி!

கோவில்களை விடுவிக்க தொடர்ந்து செயல்படுவோம்! சத்குரு பேட்டி!
X

தமிழகத்தில் நடைபெற்று வரும் சட்டமன்ற தேர்தலில் தமது வாக்கை பதிவு செய்த ஈஷா யோக சத்குரு ஜக்கி வாசுதேவ் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தேர்தல் என்பது மனிதகுல வரலாற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு. எந்த கலவரமும், போராட்டமும் இல்லாமல் மாற்றிக் கொள்கின்ற ஒரு முறை தான் தேர்தல். மனிதகுல வரலாற்றில் ஆட்சியும், அரசும் மாற வேண்டுமென்றால் பல வெட்டுக்கள் போராட்டங்கள் நடைபெறும் . ஆனால் இப்போது முழுவதும் மாறி எந்த வித போராட்டமும் இன்றி தேர்தலை நடத்துவதும், அதில் தனி மனிதனுக்கு தரப்பட்டுள்ள மகத்தான மரியாதையாகவும் வாக்குரிமை உள்ளது. இந்தியாவில் உள்ள யாராக இருந்தாலும் அனைவருக்கும் ஒரே ஒரு ஓட்டு என்பதில் தான் ஜனநாயகத்தில் நாம் அனைவரும் சமம் என்று புரிந்து கொள்ள வேண்டும்

கோவில் அடிமை நிறுத்து இயக்கம் வெற்றிகரமான இயக்கமாக செயல்பட்டு வருகிறது.இதுவரை சுமார் 3.5 கோடி மக்கள் இதற்கு உறுதுணையாக இருந்துள்ளார்கள். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் இது குறித்து பேசி வருவதே இந்த இயக்கத்தின் வெற்றி தான். அதிலும் தமிழகத்தில் உள்ள முக்கியமான இரண்டு கட்சிகள் சில படிகள் மேலே போய் கோவில்களை புனரமைப்பு செய்வதற்கு தேவையான பணம் கொடுக்கிறோம், தேவையானதை செய்கிறோம் என்று சொல்லி இருகிறார்கள். ஆனால் அரசு கட்டிடங்களை மட்டுமே சரி செய்ய முடியும்.
கோவில்களை உயிரோட்டமாக மாற்ற பக்தியுணர்வுடன் செய்யப்படும் பக்தர்கள் கரங்களில் தான் இருக்க வேண்டும். தமிழகத்தில் அடுத்து அமைய இருக்கும் ஆட்சியில் அவர்களுடன் இணைந்து அடுத்த ஐந்து வருடத்தில் இதனை ஒரு முடிவுக்கு கொண்டு வரலாம் என்று தெரிவித்துள்ளார்.

Tags:
Next Story
Share it