சிகிச்சைக்கு உதவி தேவை..! கண்ணீருடன் பெற்றோர் வைத்த முக்கிய கோரிக்கை!

ஆண் மற்றும் பெண் உறுப்புடன் உள்ள 5 மாத குழந்தைக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க உதவ வேண்டும் என குழந்தையின் பெற்றோர் கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தி உள்ளனர்.
டிஎன்ஏ பரிசோதனையில் பெண் குழந்தை என உறுதிப்படுத்திய புதுச்சேரி ஜிப்மர் மருத்துவர்கள், தொடர் சிகிச்சை செய்ய வேண்டும் என கூறியுள்ளதால் அரசு நிதி உதவி செய்ய வேண்டுமென பெற்றோர் கோரிக்கை விடுத்தனர்.