ஏ.டி.எம் மில் பணம் இருப்பதை பார்த்திருப்போம் , ஆனால் ஏ.டி.எம் மில் தண்ணீர் வருவதை பார்த்திருக்கீங்களா ? இதோ ...

X

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோவையில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.இதில் கோவையில் உள்ள ஒன்பது குளங்களை ரூ.377.54 கோடியில் மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதில் உக்கடம் பெரியகுளம் பகுதியில் மேம்பாட்டு பணிகள் நிறைவு பெற்று அதனை இன்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொது மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். இதில் இடம் பெற்றுள்ள ஐ லவ் கோவை என்கிற செல்பி கார்னர் பொதுமக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

மேலும் பெரியகுளம் கரைப்பகுதியில் ஒரு ரூபாய்க்கு ஒரு லிட்டர் சுத்தமான குடிநீரை வழங்கும் ‘வாட்டர் ஏ.டி.எம்’ இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது. இதனையும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இன்று முதலமைச்சர் திறந்து வைத்துள்ளார். தற்போது இந்த ‘வாட்டர் ஏ.டி.எம்’ புகைப்படங்களை பல்வேறு தரப்பினரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.

Newstm.in

Next Story
Share it