கொரோனாவுக்காக எங்க நிலத்தை தர்றோம்..! நெகிழ வைத்த தமிழக சிறுமி! குவியும் பாராட்டுக்கள்!!

கொரோனாவுக்காக எங்க நிலத்தை தர்றோம்..! நெகிழ வைத்த தமிழக சிறுமி! குவியும் பாராட்டுக்கள்!!

கொரோனாவுக்காக எங்க நிலத்தை தர்றோம்..! நெகிழ வைத்த தமிழக சிறுமி! குவியும் பாராட்டுக்கள்!!
X

சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் உயிரிழந்தார். அவருடைய சடலத்தை புதைக்க அப்பகுதி மக்களால் எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழகத்தில் இச்சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை உண்டு பண்ணியது.

உயிரிழந்த 2 டாக்டர்களின் உடல்களை புதைக்க எதிர்ப்பு தெரிவித்தது மிகப் பெரிய விவகாரமாக உருவெடுக்கவும், நீதிமன்றம் இந்த விஷயத்தை தானாக முன்வந்து விசாரணை எடுத்தது. மத்திய, மாநில அரசுகள் இது சம்பந்தமான புது உத்தரவுகளையும் பிறப்பித்து வருகின்றனர்.

எனினும், டாக்டர் உயிரிழந்த தினத்தன்று கலவரமும், வன்முறையும் நிகழ்ந்தபோது சடலத்தை புதைக்க முதல் ஆளாக முன் வந்து நிலம் தந்தது தேமுதிக தலைவர் விஜயகாந்த் தான். இதையடுத்து பலரும் அர்ப்பணித்து உயிரிழந்தவர்களுக்காக தங்கள் நிலங்களை தர முன்வந்து கொண்டுள்ளனர்.

அந்த வகையில் மதுரை மாணவி தென்னரசியும் நிலம் தர விரும்பி அதற்காக பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில் ; ஐயா என் அப்பா விவசாயி , எங்களுக்கு, 3 ஏக்கர் நிலம் இருக்கு. கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் உள்ள டாக்டர், நர்ஸ், போலீசார், நாளிதழ் மற்றும் துாய்மை பணியாளர்கள் வைரஸ் பாதிப்பால் இறந்தால் , உடலை அடக்கம் செய்ய , எங்களுடைய நிலத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இத்துடன் அவர்களது நிலத்தின் பட்டா , சிட்டா நகல்களையும் இணைத்திருந்தார் அந்த சிறுமி.தென்னரசி எழுதிய இந்த கடிதம் இணையத்தில் வைரலாகி மாணவியின் இச்செயல் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

Newstm.in

Next Story
Share it