1. Home
  2. தமிழ்நாடு

தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்து வரும் நம் வீரர்கள், அரசின் அங்கமாகியுள்ளதில் மகிழ்கிறோம் - துணை முதலமைச்சர் வாழ்த்து..!

Q

தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்து வரும் நம் வீரர்கள், அரசின் அங்கமாகியுள்ளதில் மகிழ்கிறோம் என பணி வாய்ப்பைப் பெற்றுள்ள அனைவருக்கும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், விளையாட்டுத்துறையை தேர்ந்தெடுக்கும் நம் இளைஞர்கள் தன்னம்பிக்கையோடு தங்கள் இலக்கினை நோக்கி நடைபோட்டிட, அவர்களுக்கான 3% இட ஒதுக்கீட்டின் அடிப்படையில், அரசு மற்றும் அரசு பொதுத்துறை நிறுவனங்களில் இந்த நிதியாண்டில் 100 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்று நம் முதலமைச்சர் ஸ்டாலின்   அவர்களின் வழிகாட்டுதலின்படி அறிவித்திருந்தோம்.

இதன்படி, இதுவரை இல்லாத அளவுக்கு நம் #திராவிட_மாடல் அரசு சார்பில் முதற்கட்டமாக, 84 வீரர் - வீராங்கனையருக்கு பல்வேறு அரசு & பொதுத்துறை நிறுவனங்களில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், பணி நியமன ஆணைகளை தலைமைச் செயலகத்தில் இன்று வழங்கினார்கள்.

ஆடுகளத்தில் தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்து வரும் நம் வீரர்கள், தமிழ்நாடு அரசின் அங்கமாகியுள்ளதில் மகிழ்கிறோம். 

பணி வாய்ப்பைப் பெற்றுள்ள அவர்களை நம் முதலமைச்சர் அவர்களுடன் இணைந்து வாழ்த்தினோம் என பதிவிட்டுள்ளார்.


 


 

Trending News

Latest News

You May Like