"நாம் கொரோனாவால் சாக தகுதி உடையவர்கள்" : வரலட்சுமி காட்டம்!

"நாம் கொரோனாவால் சாக தகுதி உடையவர்கள்" : வரலட்சுமி காட்டம்!

நாம் கொரோனாவால் சாக தகுதி உடையவர்கள் : வரலட்சுமி காட்டம்!
X

அறந்தாங்கி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் நாம் அனைவரும் வாழத்தகுதி அற்றவர்கள் என வரலட்சுமி தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்த சம்வபம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள நடிகை வரலட்சுமி சரத்குமார், '’இங்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது? மற்றும் ஒரு குழந்தை கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இப்படிப்பட்ட உலகில் தான் நாம் வாழந்து கொண்டிருக்கிறோம் என்றால் நாம் அனைவரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சாக தகுதியுடையவர்கள் தான்... அது தான் மனிதர்களாகிய நமக்கு கடவுளின் பதிலாகவும் இருக்கும்.. நாம் அனைவரும் வாழத்தகுதி அற்றவர்கள்....’’ என பதிவிட்டுள்ளார். 

newstm.in

Next Story
Share it