1. Home
  2. தமிழ்நாடு

அட்லாண்டிக் கடல் பகுதியில் வீடியோவை பார்த்து , வாட்ஸ் அப் மூலம் ரூ. 47 ஆயிரம் கோடிக்கு தீவை வாங்கிய நபர் !!

அட்லாண்டிக் கடல் பகுதியில் வீடியோவை பார்த்து , வாட்ஸ் அப் மூலம் ரூ. 47 ஆயிரம் கோடிக்கு தீவை வாங்கிய நபர் !!


அட்லாண்டிக் கடல் பகுதியில் அயர்லாந்து ஒட்டி, தென்மேற்கில் ஐரிஷ் பகுதியில் இருக்கும் ஹார்ஸ் தீவை ஐரோப்பியர் ஒருவர் வீடியோவில் பார்த்து, வாட்ஸ் அப் மூலம் ரூ. 47 ஆயிரம் கோடிக்கு வாங்கியுள்ளார்.

அந்த தீவின் பரப்பளவு 157 ஏக்கர். அந்த தீவைப் பார்க்காமலே வாங்கி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக பணம் படைத்தவர்கள் தங்களது வசதிக்கு ஏற்ப குட்டி குட்டி தீவை வாங்குவது வழக்கம்.

தற்போது கொரோனா வைரஸ் பரவலால் ஒருவருக்கொருவர் சந்திக்க முடியாமல், பயணிக்க முடியாமல் உள்ளனர். ஆனால், முகேஷ் அம்பானி போன்ற தொழில் அதிபர்களுக்கு இது பெரிய விஷயமில்லை.

அந்த வகையில் தற்போது ஐரோப்பிய பகுதியில் ஹார்ஸ் தீவை ஐரோப்பிய ஒருவர் வாங்கி இருக்கிறார். இந்த தீவில் மூன்று பீச், ஏழு வீடு, வனவிலங்குகள் சரணாலயம், விருந்தினர் இல்லம் ஆகியவை இருக்கின்றன.

இங்கு தாமிர தொழிற்சாலையும் உள்ளது. 137 மக்கள் இந்த தீவில் வசித்து வந்துள்ளனர். இந்த தீவில் ஹெலிபேட், ஜிம், விளையாட்டு அரங்கம், மின் வசதி, கழிவு நீர் கால்வாய் வசதி என்று அனைத்தும் உள்ளது.

மாண்டேக் என்ற ரியல் எஸ்டேட் கைக்கு இந்த தீவு சென்ற பின்னர் அங்கு மக்கள் யாரும் இல்லை. தற்போது இந்த ரியல் எஸ்டேட்டிடம் இருந்து ஐரோப்பியர் ஒருவர் வாங்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

Newstm.in

Trending News

Latest News

You May Like