எச்சரிக்கை...! ஊரடங்கால் பெண்கள், குழந்தைகள் பாலியல் வன்முறைக்கு ஆளாக நேரிடும்!!

எச்சரிக்கை...! ஊரடங்கால் பெண்கள், குழந்தைகள் பாலியல் வன்முறைக்கு ஆளாக நேரிடும்!!

எச்சரிக்கை...! ஊரடங்கால் பெண்கள், குழந்தைகள் பாலியல் வன்முறைக்கு ஆளாக நேரிடும்!!
X

கொரோனா வைரஸ் தொற்றால் இடம்பெயரும் பெண்களும் சிறுமிகளும் பாலியல் வன்முறைக்கு ஆளாக நேரிடும் என, ஐ.நா.,வின் அகதிகள் நிறுவனம் எச்சரித்துள்ளது. 

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த, பல்வேறு நாடுகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் குடும்பத்துடன் புலம்பெயர்ந்து வாழும் தொழிலாளர்களும், நாடற்ற அகதிகளும் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். அடுத்த வேளை உணவுக்கு வழியற்ற நிலை ஏற்பட்டதால் சிலர் தங்களது சொந்த ஊர்களுக்கு, பாதுகாப்பற்ற முறையில் குடும்பத்துடன் இடம் பெயர்கின்றனர். 

அப்படி இடம் பெயரும் பெண்களும் சிறுமிகளும் பாலியல் வன்முறைக்கு ஆளாக அதிகளவில் வாய்ப்புள்ளதாக ஐ.நா.,வின் அகதிகள் நிறுவனம் எச்சரித்துள்ளது. இடம் பெயர முடியாத பெண்கள், வருமையின் காரணமாக, பாலியல் தொழிலுக்குத் தள்ளப்படுகின்றனர். என்றும் இப்படியான பாதிப்புக்கு உள்ளாகும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டியது அரசுகளின் கடமை எனவும் தெரிவித்துள்ளது. 

newstm.in

Next Story
Share it