கோபப்பட்ட வனிதா.. வயது வித்தியாசத்தை மறந்து மன்னிப்பு கேட்ட பழம்பெரும் நடிகை.. இதுதான் காரணம் !

கோபப்பட்ட வனிதா.. வயது வித்தியாசத்தை மறந்து மன்னிப்பு கேட்ட பழம்பெரும் நடிகை.. இதுதான் காரணம் !

கோபப்பட்ட வனிதா.. வயது வித்தியாசத்தை மறந்து மன்னிப்பு கேட்ட பழம்பெரும் நடிகை.. இதுதான் காரணம் !
X

வயது வித்தியாசத்தை மறந்து வனிதாவிடம் மன்னிப்பு கேட்டுள்ளார் தமிழ் திரையுலகின் பழம்பெரும் நடிகையான குட்டி பத்மினி.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையான வனிதா மூன்றாவது திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த திருமண நிகழ்வின் வீடியோக்கள் வெளியான நிலையில் அவை விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது.

காரணம் அவரது மூன்றாவது கணவர் தன்னுடைய முதல் மனைவியை விவாகரத்து செய்யாமலேயே வனிதாவை திருமணம் செய்து கொண்டது.

வனிதாவின் இந்தத் திருமணத்தை பலரும் விமர்சித்து வரும் நிலையில் பிரபல நடிகையான லட்சுமி ராமகிருஷ்ணன் விமர்சனம் செய்திருந்தார். இதனால் வனிதா அவரிடம் சமூக வலைதள பக்கத்திலேயே சண்டையிட்டு வந்தார்.

இந்த நிலையில் அவர் பழம்பெரும் நடிகையான குட்டி பத்மினியை விமர்சனம் செய்து பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
 

அந்தப் பதிவில் டியர் குட்டி பத்மினி மேம் இங்கே உங்களைப் பற்றி பேசுவதற்கு மன்னிக்கவும். நீங்கள் இங்கே என்னைப் பற்றி பேசவில்லை. ஆனால் ஒரு பேட்டியில் என்னுடைய குழந்தைகள் பற்றி பேசி இருந்தீர்கள்.

உங்கள் மீது எனக்கு நல்ல மரியாதை இருந்தது. ஆனால் இப்போது உங்களை வெறுக்கிறேன் என பதிவிட்டிருந்தார். மேலும் அந்த பேட்டி உங்களின் உள் நோக்கத்தை காட்டி விட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வனிதாவின் இந்த பதிவை பார்த்த குட்டி பத்மினி நான் பேசியது உன் மனதை புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என வயது வித்தியாசத்தை மறந்து பதிவிட்டுள்ளார்.

குட்டி பத்மினி மன்னிப்பு கேட்டதை தொடர்ந்து வனிதா வருத்தம் தெரிவித்ததற்கு நன்றி. என்னுடைய குழந்தைகள் தான் என் உலகம். அவர்களை ஹாஸ்டலுக்கு அனுப்பி வைக்குமாறு நீங்கள் கூறியதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என கூறியுள்ளார்.

newstm.in 

Next Story
Share it