பொங்கலுக்கு ரிலீசாகும் விஷ்ணு விஷால் நடித்த படம் ..!

பொங்கலுக்கு ரிலீசாகும் விஷ்ணு விஷால் நடித்த படம் ..!

பொங்கலுக்கு ரிலீசாகும் விஷ்ணு விஷால் நடித்த படம் ..!
X


தமிழில் ஒரு முன்னணி இயக்குனரான பிரபு சாலமன் "காடன்" என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.அதில் ராணா டகுபதி மற்றும் விஷ்ணு விஷால் இருவரும் இணைந்து நடித்துக் கொண்டிருக்கினர். பிரம்மாண்டமான காட்சிகளால் உருவாகும் இந்த திரைப்படம் அதிக எதிர்பார்ப்பிற்கு மத்தியில் தயாரிக்கப்பட்டு வருகிறது.

காடன் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் பாதி நிறைவுற்ற நிலையில் ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு நடத்த முடியாமல் போனது. தற்போது சிறு சிறு தளர்வுகளுடன் அரசு அனுமதி அளித்திருப்பதால் முழுவீச்சில் படப்பிடிப்புகள் நடந்து வருகிறது என தகவல் வெளியாகி இருக்கின்றன.

இந்த நிலையில் தற்போது இந்த படக் குழுவில் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் ஒன்று கிடைத்துள்ளது‌‌. அது என்ன என்றால் காடன் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து வரும் பொங்கலுக்கு வெளியிடப்படும் என படத்தின் ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளார்.

அது தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது குறிப்பிடத்தக்கது.மூன்று மொழிகளில் இந்த திரைப்படம் தயாராக இருப்பதால் விஷ்ணு விஷால் மற்றும் ராணா டகுபதி க்கு இந்த காடன் திரைப்படம் ஒரு மிகப்பெரிய ஜாக்பாட் என்றுதான் கூறவேண்டும்

Next Story
Share it