மக்கள் செல்வன் தயாரிக்கும் படத்தில் ஹீரோவாகும் விஜய்யின் மகன்!

மக்கள் செல்வன் தயாரிக்கும் படத்தில் ஹீரோவாகும் விஜய்யின் மகன்!

மக்கள் செல்வன் தயாரிக்கும் படத்தில் ஹீரோவாகும் விஜய்யின் மகன்!
X

நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் விரைவில் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தெலுங்கில் வெளியாக உள்ள உப்பெனா என்ற படத்தின் தமிழ் ரீமேக் மூலம் சஞ்சய் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார் என்று கூறப்படுகிறது. தெலுங்கில் வில்லனாக நடித்த விஜய் சேதுபதி, தமிழிலும் அதே கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார். அதுமட்டுமல்லாமல் மைத்ரி மூவி மேக்கர்ஸுடன் இணைந்து விஜய் சேதுபதி படத்தை தயாரிக்க உள்ளார். மாஸ்டர் படத்தின் ஷீட்டிங்கின் போது உப்பெனா கதை குறித்து விஜய்யிடம் விஜய் சேதுபதி பேசினார் என்றும், அப்போது கதை தனது மகனுக்குப் பொருத்தமாக இருக்கும் என விஜய் முடிவெடுத்ததாகத் தெரிகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வத் தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

newstm.in

Next Story
Share it