1. Home
  2. தமிழ்நாடு

பக்தியை விட ஒழுக்கமே முக்கியம் என்பதை உலகிற்கு உணர்த்தும் விஜயதசமி..!!

பக்தியை விட ஒழுக்கமே முக்கியம் என்பதை உலகிற்கு உணர்த்தும் விஜயதசமி..!!

தினமும் கோயிலுக்குச் சென்று சிவபார்வதியை வணங்குவது சிவபக்தனாக ராவணனின் வழக்கம். பக்தியோடு இருந்தாலும், ஒழுக்கத்தை அவன் பின்பற்றவில்லை.

சீதையை சிறையெடுத்து, அசோகவனத்தில் வைத்தான். இதனால், பார்வதிதேவிக்கு, ராவணன் மீது சீற்றம் உண்டானது. பக்தியை விட ஒழுக்கமே முக்கியம் என்பதை உலகிற்கு உணர்த்த எண்ணினாள். விஸ்வாமித்திரர் மூலம், சிறுவயதிலேயே ராமன், தேவிமந்திரத்தை அறிந்திருந்தார். அம்மந்திரத்தை ஜெபித்து நவராத்திரி விரதம் மேற்கொண்டார்.

அவருக்கு துர்க்கையாக காட்சியளித்த பார்வதி, யுத்தத்தில் வெற்றி கிடைக்க அருள்புரிந்தாள். ராவணனை வெற்றி கொண்ட தினத்தையே வடமாநிலங்கள் சிலவற்றில் விஜயதசமியாக மக்கள் கொண்டாடுகின்றனர்.

வெற்றிக்கு ஒழுக்கம் முக்கியம் என்பதை காட்டும் நாளாக விஜயதசமி அமைந்துள்ளது. துர்க்கையானவள் வீரத்தின் தெய்வம். வீரர்களின் தொடக்கத்திலும், முடிவிலும் வழிப்படும் தெய்வம். இவள் நெருப்பின் அழகுடன் ஆவேசப் பார்வை கொண்டவள் சிவபிரியையான துர்க்கை இச்சா சக்தி. ‘’கொற்றவை ‘’ என்றும் ‘’காளி’’ என்றும் குறிப்பிடுவர்.

வன துர்க்கை, சூலினி துர்க்கை , ஜாதவே தோதுர்க்கை, ஜ்வாலா துர்க்கை, சாந்தி துர்க்கை சபரி துர்க்கை, தீப் துர்க்கை, சூரி துர்க்கை லவண துர்க்கை இவர்கள் துர்க்கையின் அம்சங்கள்.

Trending News

Latest News

You May Like