விஜய்க்கு நல்ல பெயர் கிடைக்க வேண்டும்...தமிழ்நாட்டிற்கு பொக்கிஷம் கிடைக்க சிறப்பு பூஜை…. எஸ்.ஏ. சந்திரசேகர் பேட்டி!
நடிகர் விஜய் தற்போது அரசியல்வாதியாக உருவெடுத்துள்ள நிலையில் அவரது தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் வருகின்ற அக்டோபர் 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் முதல் மாநாடு நடைபெற இருக்கிறது.
இந்த மாநாடு தடை இன்றி சிறப்பாக நடைபெற புளியந்தோப்பு விஜய் ரசிகர் மன்றத்தின் சார்பில் கொரட்டூரில் உள்ள விஜய் கட்டிருக்கும் சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜைக்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த பூஜையின் நடிகரும் த. வெ. க. தலைவருமான விஜய், அவரது தாயார் ஷோபா, அவரது தந்தை எஸ் ஏ சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சிறப்பு பூஜையை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதமும் அன்னதானமும் வழங்கப்பட்டது. இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எஸ் ஏ சந்திரசேகர், “வருகின்ற ஞாயிற்றுக்கிழமை மாநாடு சிறப்பாக நடக்க வேண்டும். விஜய்க்கு நல்ல பெயர் கிடைக்க வேண்டும். அவர் ஒரு பெரிய நிலைமைக்கு வர வேண்டும். தமிழ்நாட்டிற்கு பொக்கிஷம் கிடைக்க வேண்டுமென இந்த சிறப்பு பூஜை நடத்தப்பட்டுள்ளது” என்று பேசினார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்கள் த. வெ. க கட்சியில் உங்களுக்கு என்ன பொறுப்பு? என்று கேள்வி எழுப்பிய போது சிரித்தபடி கைகாட்டி விட்டு அந்த இடத்தை கடந்து சென்றார் எஸ்.ஏ சந்திரசேகர்.
#JUSTIN தமிழ்நாட்டிற்கு பொக்கிஷம் கிடைக்க வேண்டும் -
— News18 Tamil Nadu (@News18TamilNadu) October 24, 2024
தவெக தலைவர் விஜயின் தந்தை S.A. சந்திரசேகர் பேட்டி#TVK #Vijay #Chandrasekar #Korattur #News18Tamilnadu | https://t.co/3v5L32pe7b pic.twitter.com/hSEjXEIdcw