விஜய் அன்புமணி மகள் திடீர் சந்திப்பு..!
அன்புமணி ராமதாஸின் மகளான சங்கமித்ரா அன்புமணி, 'அலங்கு' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார்.
தமிழ்நாடு மற்றும் கேரளா எல்லை பகுதியில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து, புலம்பெயர்ந்த பழங்குடியினரின் வாழ்க்கையை பதிவு செய்யும் வகையில் இந்த படம் உருவாகி வருகிறது. இதில் ஒரு நாய்க்கும் மனிதருக்கும் இடையிலான எமோஷனும் பேசப்பட்டுள்ளது.
இப்படம் வரும் டிசம்பர் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த நிலையில் இப்படத்தின் ரிலீஸ் புரோமோவை தவெக தலைவரும் நடிகருமான விஜய் வெளியிட்டுள்ளார். படத்தின் முன்னோட்டத்தை பார்த்த தளபதி விஜய் அவர்கள் படக்குழுவை வெகுவாக பாராட்டியுள்ளார். மேலும் படக்குழுவுடன் தனித்தனியாக புகைப்படம் எடுத்துள்ளார்.