சிறுமி குளிக்கும் போது திருட்டுத் தனமாக வீடியோ எடுத்த காமுகர்கள் !! அவமானம் தாங்க முடியாமல் 15 வயது சிறுமி தீக்குளிப்பு.

சிறுமி குளிக்கும் போது திருட்டுத் தனமாக வீடியோ எடுத்த காமுகர்கள் !! அவமானம் தாங்க முடியாமல் 15 வயது சிறுமி தீக்குளிப்பு.

சிறுமி குளிக்கும் போது திருட்டுத் தனமாக வீடியோ எடுத்த காமுகர்கள் !! அவமானம் தாங்க முடியாமல் 15 வயது சிறுமி தீக்குளிப்பு.
X

வேலூர் பாகாயம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 15 வயது மாணவி பென்னாத்தூர் அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து முடித்துள்ளார். இந்த மாணவியின் வீட்டு பாத்ரூமில் மேற்கூரை இல்லை.

சில நாட்களுக்கு முன்பு பாத்ரூமில் இவர் குளித்து கொண்டிருந்த போது, அதே பகுதியை சேர்ந்த 22 வயது கட்டிட தொழிலாளி ஆகாஷ் என்கிற பூனை கண்ணன் என்பவர் செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்..

வீடியோ எடுப்பதற்காக, பிளஸ்-2 முடித்துள்ள 17 வயது சிறுவர்களையும் தன்னுடன் அழைத்து சென்றுள்ளார். பிறகு வீடியோவை மாணவிக்கு அனுப்பியதுடன், தங்கள் ஆசைக்கு இணங்கும்படி தொல்லை தந்துள்ளனர்.

இதை பார்த்து திடுக்கிட்ட மாணவி உடனடியாக அந்த வீடியோவை டெலிட் செய்தார். மீண்டும் வீடியாவை அனுப்பி கொண்டே இருக்கவும் , அவர்களிடம் அதை டெலிட் செய்து விடும் படி கெஞ்சி உள்ளார்.

ஒரு கட்டத்தில் மனம் நொந்த மாணவி, மண்ணெண்ணைய் எடுத்து உடம்பில் ஊற்றி கொண்டு தீக்குளித்தார். உடனடியாக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பிறகு , பூனை கண்ணன் உட்பட பாலாஜி, கணபதி என்கிற தாமஸ் என 3 பேரையுமே போலீசார் பிடித்து கைது செய்தனர்.

இறப்பதற்கு முன் , சிகிச்சையில் இருந்த போது சிறுமி வாக்கு மூலம் தந்திருந்தார். அதில் , அந்த 3 பேரால் தான் நான் தீக்குளிச்சிட்டேன்.. உன்னையும் உன் சித்தப்பனையும் பழி வாங்க தான், வீடியோ எடுத்தோம்.

அந்த வீடியோவை உன் சித்தப்பா நம்பருக்கு அனுப்பி இருக்கேன். அதை பார்த்துட்டு எங்க லைனுக்கு வா ன்னு சொன்னாங்க. நான் பயந்துபோய் வாட்ஸ்அப் எடுத்து பார்த்தால் குளிக்கிற வீடியோ இருந்தது.

நான் உடனே அவங்களுக்கு போன் பண்ணி டெலிட் பண்ண சொன்னேன்.. ஆனால், அதுக்கு அவனுங்க 5000 ரூபாய் கேட்டானுங்க... எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல. அதனால் நான் இப்படி பன்னிட்டேன். இந்த சம்பவம் அப்பகுதி மக்களையும் , தமிழகம் மக்களையையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newstm.in

Next Story
Share it