இன்று சென்னை வருகிறார் துணை ஜனாதிபதி தன்கர் மற்றும் அமித்ஷா... சென்னையில் போக்குவரத்து மாற்றம்..!

பாஜக மூத்த தலைவருமான வெங்கையா நாயுடுவின் பேரன் திருமணம் மகாபலிபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடக்கவுள்ளது. இந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தங்கர் மற்றும் மத்திய அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
இதற்காக டெல்லியில் இருந்து மாலையில் புறப்படும் அமித் ஷா, இரவு 7 மணியளவில் சென்னை விமான நிலையம் வருகிறார். அதன்பின் சாலை மார்க்கமாக திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்கும் தனியார் மண்டபத்திற்கு செல்கிறார். இதன்பின் மீண்டும் சென்னை விமான நிலையம் வந்து, டெல்லி புறப்படவுள்ளார். அதேபோல் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தங்கர், மாலை 4.55 மணியளவில் சென்னை வருகிறார்.
அதன்பின் காது கண் கேளாதோர் முட்டுக்காட்டில் உள்ள தேசிய நிறுவனத்தின் 3வது ஆண்டு கருத்தரங்கில் பங்கேற்கிறார். இதன்பின் வெங்கையா நாயுடு பேரனின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்கும் அவர், மீண்டும் இரவு சென்னை விமான நிலையம் வந்து டெல்லி புறப்படவுள்ளார். இதனால் சென்னை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகளின் போக்குவரத்து தாமதமடையாமல் இருக்கவும், சுமூகமாக இருப்பதை உறுதி செய்யும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி மாலை 4 மணி முதல் இரவு 11.30 மணி வரை போக்குவரத்து போலீசார் மாற்றம் செய்துள்ளனர். அதில் சோழிங்கநல்லூரில் இருந்து அக்கரைக்கு வரும் வாகனங்கள் சோழிங்கநல்லூர் சந்திப்பில் ஓஎம்ஆர் சாலை வழியாக திருப்பி விடப்படும்.
அதேபோல் மகாபலிபுரத்தில் இருந்து ஈசிஆர் வழியாக வரும் வாகனங்கள், கோவளம் சந்திப்பில் இருந்து திருப்பி விடப்பட்டு கேளம்பாக்கம் வழியாக மாற்றி விடப்படும். திருப்போரூரில் இருந்து ஓஎம்ஆர் வரும் வாகனங்கள், கேளம்பாக்கம் சந்திப்பில் திருப்பி விடப்படும். விமான நிலையத்திற்கு செல்லவிருக்கும் வாகனங்கள், ஓஎம்ஆர் மற்றும் வண்டலூர் கேளம்பாக்கம் சாலை, ஜிஎஸ்டி சாலை ஆகியவற்றை பயன்படுத்தி செல்லலாம்.
தாம்பரம் மாநகர எல்லை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அனைத்து கனரக வாகனங்களும் ஓஎம்ஆர், ஈசிஆர் மற்றும் 200 அடி ரேடியல் சாலையில் மதியம் 2 மணி முதல் இரவு 11.30 மணி வரை நுழைவது கட்டுப்படுத்தப்படும். வாகன ஓட்டுகள் தங்கள்ம் இலக்கை அடைய ஓஎம்ஆர் மற்றும் ஜிஎஸ்டி சாலையை பயன்படுத்தி அவர்கள் செல்லும் இடங்களுக்கு செல்லமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.