மிக மிக கனமழை – மும்பைக்கு ரெட் அலர்ட்!!

 | 

மும்பையில் மிகவும் கனமழை பெய்து வருவதால் அம்மாநிலத்தின் பல மாவட்டங்களில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில் வானிலை மோசமடைந்த காரணத்தால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக மண்டல வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால் மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இடையே மழை குறைந்திருந்த நிலையில் நேற்று மீண்டும் கனமழை பெய்யத் தொடங்கியது.

mumbai-rains

இதனையடுத்து மகாராஷ்டிரா மற்றும் கொங்கன் பகுதியில் தொடர்ந்து கனமழை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மும்பை, தானே, நவிமும்பை உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2 நாட்களில் பெய்த கனமழையால் பல இடங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. சாலைகளில் வெள்ளம் சூழ்ந்ததால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

mumbai-rains

மகாராஷ்டிராவின் சில இடங்களில் 20 செ.மீக்கு அதிகமான அளவில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும், 24ஆம் தேதிக்கு பிறகே மழை குறையும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP