நீட் தேர்வு அச்சம் - வேலூர் மாணவி தற்கொலை..!

 | 

காட்பாடி அருகே, நீட் தேர்வில் தோல்வியடைந்து விடுவோம் என்ற அச்சத்தில் இருந்த மாணவி தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த தலையாரம் பட்டு கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி தம்பதி திருநாவுக்கரசு, ருக்மணி. இவர்களின் மகள் சௌந்தர்யா (17). இவர், கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு நீட் தேர்வு எழுதியுள்ளார். ஆனால், தேர்வு சரியாக எழுதவில்லை என்ற விரக்தியில் இருந்துள்ளார்.

இந்நிலையில், இன்று (15ம் தேதி) காலை வீட்டில் யாரும் இல்லாத போது புடவையின் மூலம் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் குறித்து காட்பாடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த 4 நாட்களில் மேட்டூர் தனுஷ், அரியலூர் கனிமொழி ஆகியோர் நீட் தேர்வு பயத்தால் தற்கொலை செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP