திருமழிசை காய்கறி சந்தை மூடப்படுகிறது ?

திருமழிசை காய்கறி சந்தை மூடப்படுகிறது ?

திருமழிசை காய்கறி சந்தை மூடப்படுகிறது ?
X

கொரோனா பரவல் காரணமாக கோயம்பேடு காய்கறி சந்தை மூடப்பட்டது. பின்னர் திருமழிசையில் தற்காலிக காய்கறி சந்தை அமைக்கப்பட்டு உள்ளது. ஆனாலும், சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வரும் 19ம் தேதி முதல் 30ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு  அறிவித்தது. இதனையடுத்து திருமழிசை தற்காலிக காய்கறி சந்தை ஞாயிற்று கிழமைகளான வரும் 21 மற்றும் 28 ஆகிய தேதிகளில் செயல்படாது என்று கோயம்பேடு மொத்த வியாபாரிகள் சங்க தலைவர் ராஜசேகர் அறிவித்துள்ளார். இதையடுத்து  இம்மாதம் 21 மற்றும் 28 ஆகிய தேதிகளில்  திருமழிசை தற்காலிக காய்கறி சந்தை முழுமையாக மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Newstm.in

Next Story
Share it