வனிதா விவகாரம்... சூர்யா தேவி கைது!

வனிதா விவகாரம்... சூர்யா தேவி கைது!

வனிதா விவகாரம்... சூர்யா தேவி கைது!
X

நடிகை வனிதாவை சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வந்த புகாரில் சூர்யா தேவி என்பவர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

நடிகை வனிதா அவருடன் இணைந்து பணியாற்றிய பீட்டர் பால் என்பவரை அண்மையில் திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமண வீடியோ அவரது யூடியூப் சேனலிலும் ஒளிபரப்பப்பட்டது. இதனிடையே பீட்டர் பாலின் முன்னாள் மனைவியான எலிசெபத் என்பவர், பீட்டர் பால் மீது புகார் அளித்தார். எலிசெபத்திற்கு ஆதரவாக சிலர் குரல் கொடுக்கத் தொடங்கினர்.


இதுஒருபுறம் இருக்க சூர்யா தேவி என்பவர், தன்னை ஆபாசமாகத் திட்டி, கொலை மிரட்டல் விடுத்ததாக வனிதா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்த வடபழனி மகளிர் காவல்துறையினர் கொலை மிரட்டல், ஆபாசமாக திட்டுதல் போன்ற பிரிவுகளில் சூர்யாதேவி மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

newstm.in

Next Story
Share it