1. Home
  2. தமிழ்நாடு

ஆட்டோ ஓட்டும் சகோதரர்களுடன் ரக்ஷா பந்தன் கொண்டாடிய வானதி ஸ்ரீனிவாசன்..!

1

நாடு முழுவதும் நேற்று ரக்ஷா பந்தன் கொண்டாடப்பட்டது. சகோதரர்களுக்கு தங்கள் அன்பான சகோதரிகள் ராக்கி கட்டி இனிப்பு வழங்கி ரக்சா பந்தனை கொண்டாடினர்.

இந்நிலையில், கோவை மாவட்டம் பூ மார்க்கெட் அருகில் உள்ள, தெப்பக்குளம் மைதானத்தில் முன்கள பணியாளர்கள், ஆட்டோ டிரைவர்களுடன், கோவை தெற்கு சட்டசபை எம். எல். ஏ. , வானதி சீனிவாசன் ரக்சா பந்தன் விழாவை இன்று கொண்டாடினார். அவர்களுக்கு நலத் திட்ட உதவிகள் மற்று ரக்ஷா பந்தன் விழாவையொட்டி, டிரைவர்களுக்கு கயிறு கட்டி ரக்ஷா பந்தன் வாழ்த்து தெரிவித்தார்.

தொடர்ந்து விழாவில் பேசிய வானதி சீனிவாசன், ''ரக்ஷா பந்தன் மற்றும் ஓணம் பண்டிகையையொட்டி, நம் நாட்டு சகோதரிகள் நலம் பெறும் வகையில், நம் பிரதமர் ஒரு சகோதரனாக சமையல் காஸ் விலையை குறைத்து, மானியத்தை அதிகப்படுத்தி உள்ளார். ஒரு சகோதரனாக, சகோதரிக்கு அண்ணன் செய்வதை போன்று, நாட்டு மக்களுக்கு மோடி மானியத்தை குறைத்து உள்ளார். நாட்டிலேயே, 75 லட்சம் மக்கள் உஜ்வாலா திட்டத்தின் கீழ் பயனடைந்து வருகின்றனர். நம் சகோதரிகள் அனைவரும் நலம் பெற உள்ளனர், '' என்றார்.


 


 

Trending News

Latest News

You May Like