காட்டேரி திரைப்படம் OTT தளத்தில் வெளியாகும் என அறிவிப்பு….!

காட்டேரி திரைப்படம் OTT தளத்தில் வெளியாகும் என அறிவிப்பு….!

காட்டேரி திரைப்படம் OTT தளத்தில் வெளியாகும் என அறிவிப்பு….!
X

யாமிருக்க பயமே, கவலை வேண்டாம் படங்களை இயக்கிய இயக்குநர் டி.கே இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘காட்டேரி’. 

ஞானவேல்ராஜா தயாரிப்பில் உருவான இப்படத்தில் நடிகர் வைபவ், ஆத்மிகா, பொன்னம்பலம், கருணாகரன், சோனம் பாஜ்வா உள்ளிட்டோருடன் முக்கியக் கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ளார்.

இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து ஏப்ரல் 17ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஊரடங்கு, கொரோனா பரவல் உள்ளிட்ட காரணங்களால் திட்டமிட்டபடி வெளியாகவில்லை. 

ஊரடங்கு முடிந்து தியேட்டர்கள் திறக்கப்பட்டவுடன் திரையரங்கில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது.தற்போது, எதிர்பாராத விதமாக ‘காட்டேரி’ திரைப்படம் ஜீ5 OTT தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

Next Story
Share it