இஸ்ரோவின் புதிய தலைவராக வி. நாராயணன் நியமனம்..!
![1](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/4a46e7c2b5312ed3c03e31535c274e84.png?width=836&height=470&resizemode=4)
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த வி. நாராயணன், திருவனந்தபுரத்தில் வலியமலாவில் உள்ள எல்.பி.,எஸ்.சியின் இயக்குனரக பணியற்றியுள்ளார். வரும் 14-ம் தேதி இஸ்ரோ தலைவராக பொறுப்பேற்க உள்ளார். 2 ஆண்டுகள் வரையில் இப்பதவியில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இவர் ஜி.எஸ்.எல்.வி., எம்.கே-3 , கிரயோஜெனிக் இன்ஜின் உள்ளிட்ட திட்டஙகளுக்கு முக்கிய பங்காற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரோவின் தலைவராக உள்ள சோம்நாத் பதவி காலம் நிறைவடைய உள்ளது. இதையடுத்து புதிய தலைவராக வி. நாராயணனை மத்திய அரசின் நியமனக்குழு தேர்வு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.