1. Home
  2. தமிழ்நாடு

உஷார்! பன்றிகளுக்கு பரவும் புதுவகை காய்ச்சல்!!

உஷார்! பன்றிகளுக்கு பரவும் புதுவகை காய்ச்சல்!!


மிசோரம் மாநிலத்தில் உள்ள கிராமம் ஒன்றில் ஆப்பிரிக்க ஸ்வைன் காய்ச்சலால் நூற்றுக்கும் மேற்பட்ட பன்றிகள் உயிரிழந்துள்ள சம்பவம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இப்போது மருத்துவம் எந்த அளவுக்கு வளர்ச்சி கண்டுள்ளதோ அந்த அளவுக்கு நோய்களும் அதிகரித்துவிட்டன. அதற்கு உதாரணம் தான் கொரோனா போன்ற உலகை அச்சுறுத்தும் நோய்கள். அந்த வகையில் மிசோரம் மாநிலத்தில் புதுவகை பன்றிக் காய்ச்சல் மக்களை அச்சுறுத்தி வருகிறது.

மிசோரம் மாநிலம் லுங்லேய் மாவட்டத்திலுள்ள லுங்க்சன் என்ற கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பன்றிகள் காய்ச்சலாம் உயிரிழந்துள்ளன. மிசோரம் மாநில கால்நடை பராமரிப்பு துறை தொற்று மேலும் பரவாமல் இருக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

தற்போது அந்த கிராமத்திலிருந்து நோய்வாய்ப்பட்ட பன்றிகளை வாங்கவும், விற்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. தற்போது ஒரு கிராமத்தில் மட்டும் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், பல்வேறு இடங்களில் அதிகாரிகள் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

லுங்கேய் மியான்மருக்கு அருகில் இருப்பதால் தொற்று எங்கிருந்து பரவியது என்பது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். பாதிப்புக்குள்ளான பன்றிகள் மாதிரிகளை பரிசோதனை செய்து வருகின்றனர்.

தற்போது நிபா, கொரோனா போன்ற காய்ச்சல்கள் பறவைகள், விலங்குகள் மூலம் பரவுவதாக சொல்லப்படுவதால் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like