பயனாளர்கள் அவதி..! உலகம் முழுவதும் திடீரென்று வாட்ஸ்அப், பேஸ்புக் முடங்கின..!
பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்கள் திடீரென்று முடங்கி உள்ளன. இதனால் பல பயனாளர்கள் பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
அதாவது பேஸ்புக்கை எடுத்து கொண்டால் உள்ளே நுழைவதில் பயனாளர்கள் சிரமப்பட்டனர். மேலும் போட்டோ, வீடியோ போஸ்ட் செய்வதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராமை எடுத்து கொண்டால போஸ்ட்டை அப்டேட் செய்ய முடியாத நிலையை பலரும் எதிர்கொண்டுள்ளனர். அதேபோல் வாட்ஸ்அப்பிலும் போட்டோ, வீடியோ அனுப்புவதில் பலரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். இந்த பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் உள்ளிட்ட 3 சமூக வலைதளங்களும் மெட்டா நிறுவனத்துக்கு சொந்தமானதாகும். தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த பிரச்சனை ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.