கொரோனாவில் சீனாவை மிஞ்சிய அமெரிக்கா!

 | 

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் எண்ணிக்கையில் சீனாவை அமெரிக்கா மிஞ்சியுள்ளது. சீனாவில் 81,782 பேருக்கு பதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் அமெரிக்காவில் இது வரை 82,404 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளதாக ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது.

 மற்ற எந்த நாடுகளையும் விட அமெரிக்கா அதிகளவில் கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்வதே அங்கு பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக இருக்க காரணம் என கூறப்படுகிறது. இங்கு இதுவரை 3,70,000 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இதில் 2,20,000 பேருக்கு கடந்த எட்டு நாட்களில் மட்டும் சோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. தென் கொரியா எட்டு வாரங்களில் 2,20,000 பேருக்கு சோதனை செய்ததாகவும் ஆனால் தாங்கள் அதை எட்டு நாட்களில் செய்ததாகவும் வெள்ளை மாளிகை அதிகாரி திபோரா பிர்க்ஸ்  தெரிவித்துள்ளார். 


கொரோனா வால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் அதிகம் இருந்தாலும் இறப்பு விகிதத்தில் சீனாவை விட அமெரிக்காவில் குறைவாகவே உள்ளது. இங்கு 1,178 பேர் இறந்துள்ளனர். ஆனால் சீனாவில் இறப்பு விகிதம் 3,291 ஆக உள்ளது. கொரோனா பரவலை தடுக்க 16 கோடி அமெரிக்கர்கள் வீடுகளில்  முடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP