1. Home
  2. தமிழ்நாடு

WHO-வுக்கு அமெரிக்கா கைவிரிப்பு... நிதியை கொட்டிக்கொடுக்கும் சீனா!

WHO-வுக்கு அமெரிக்கா கைவிரிப்பு... நிதியை கொட்டிக்கொடுக்கும் சீனா!


கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான முயற்சிகளுக்கு உதவுவதற்காக மேலும் 30 மில்லியன் அமெரிக்க டாலர்கள் உலக சுகாதார நிறுவனத்திற்கு வழங்குவதாக சீனா அறிவித்துள்ளது.    

ஏற்கனவே 20 மில்லியன் டாலர்கள் உதவி வழங்கிய நிலையில், கூடுதலாக 30 மில்லியன் டாலர்கள் வழங்கப்பட உள்ளது. இது வளரும் நாடுகளின் சுகாதார அமைப்புகளை வலுப்படுத்த உதவும் என சீனா தெரிவித்துள்ளது. சீனாவில் இருந்து கொரோனா பரவியபோது, அந்த தீவிரத்தை உலக சுகாதார அமைப்பு மறைத்துவிட்டதாக குற்றம்சாட்டிய ட்ரம்ப், அந்த நிறுவனத்துக்கு வழங்கப்படும் நிதியை நிறுத்துவதாக கடந்த வாரம் அறிவித்தார். இந்நிலையில் சீனா தொடர்ந்து  நிதி வழங்கி வருகிறது. இதன்மூலம் டரம்ப் சொன்னது போல், கொரோனா விஷயத்தில் உலக சுகாதார நிறுவனம் சீனாவுக்கு உதவியது உண்மையாக இருக்குமோ என்று மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like