வெயிலில் நிற்க வைக்கப்பட்ட நிறைமாத கர்ப்பிணிகள்! சர்ச்சையில் சிக்கிய காவல்துறை!!

வெயிலில் நிற்க வைக்கப்பட்ட நிறைமாத கர்ப்பிணிகள்! சர்ச்சையில் சிக்கிய காவல்துறை!!

வெயிலில் நிற்க வைக்கப்பட்ட நிறைமாத கர்ப்பிணிகள்! சர்ச்சையில் சிக்கிய காவல்துறை!!
X

தேனியில் நிறைமாத கர்ப்பிணிகளான இரண்டு பேர் மருத்துவமனைக்கு சென்ற போது காவல்துறையினரால் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

போடியின் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணிகளான கார்த்திகா, அபர்ணா ஆகிய இருவரும் தங்கள் வீட்டிக்கு அருகில் வசிக்கும் ஆட்டோ ஓட்டுநரை தொடர்பு கொண்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். ஆனால் ஊரடங்கை காரணம் காட்டி போடி காவல்துறையினர் நடுரோட்டில் ஆட்டோவை மறித்துப் பறிமுதல் செய்துள்ளனர். இன்னும் 10 நாட்களில் பிரசவமாக இருக்கும் பெண்களிடம் காவல்துறையினர் கெடுபிடி காட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


ஆட்டோவை பறிமுதல் செய்துவிட்டு ஆம்புலன்சில் செல்லுமாறு காவல்துறை கூறியதாக தெரிகிறது. ஆனால் ஒரு மணி நேரம் காத்திருந்தும் ஆம்புலன்ஸ் வராததால் வெளியிலில் நடந்தே வீட்டுக்கு வந்ததாக கர்ப்பிணிகள் வேதனை தெரிவிக்கின்றனர். ஆட்டோ ஓட்டுநர்கள் இப்படி ஏதாவது காரணம் சொல்லி வெளியே சுற்றிக்கொண்டு இருப்பதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. 

newstm.in

Next Story
Share it