கர்ப்பிணியிடம் தகராறு.. தட்டிக்கேட்ட அண்ணன் குத்திக்கொலை.. கணவர் கவலைக்கிடம்..!

கர்ப்பிணியிடம் தகராறு.. தட்டிக்கேட்ட அண்ணன் குத்திக்கொலை.. கணவர் கவலைக்கிடம்..!

கர்ப்பிணியிடம் தகராறு.. தட்டிக்கேட்ட அண்ணன் குத்திக்கொலை.. கணவர் கவலைக்கிடம்..!
X

நாமக்கல்லில் இரு கோஷ்டியிடையே ஏற்பட்ட தகராறில் ஒருவர் கொலை செய்யப்பட்டார்.

நாமக்கல் மாவட்டம் அலங்காநத்தம் அடுத்த கரிய பெருமாள் கரட்டுபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் கெளதம் (23). இவரது சகோதரி கெளசல்யாவுக்கும் (21), அதேபகுதியை சேர்ந்த கோபி (24) என்பவருக்கும் திருமணம் நடைபெற்ற நிலையில், கெளசல்யா தற்போது கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில் கெளதம், கோபி மற்றும் அவரது நண்பர்கள் மணிவண்ணன், சிவகுமார், மனோஜ் ஆகியோர் ஒரு கோஷ்டியாகவும், அதேஊரை சேர்ந்த ராமசந்திரன் (32), ரவிசந்திரன் (27), பூவராகவன், மனோஜ் குமார் உள்ளிட்டோர் மற்றொரு கோஷ்டியாகவும் இருந்துள்ளனர்.

இரு கோஷ்டிகளுக்கும் இடையே முன் விரோதம் காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் கர்ப்பிணியான கெளசல்யாவிடம் ராமசந்திரன் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனையறிந்த கெளதமன், கோபியுடன் சென்று தனது தங்கையிடம் தகராறு செய்தது குறித்து தட்டி கேட்டுள்ளார்.

அப்போது ஏற்பட்ட மோதலில் ராமசந்திரன் அவரது தம்பி ரவிசந்திரன் ஆகியோர் மறைத்து வைத்திருந்த கத்தியால் கெளதம் மற்றும் கோபி ஆகியோரை சரமாரியாக குத்தியதாக தெரிகிறது.

இதில் படுகாயமடைந்த இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் ராமசந்திரன் மற்றும் மனோஜ்குமாரை அங்கிருந்தவர்கள் விரட்டிப்பிடித்தனர்.  


 

இதனிடையே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கெளதம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கோபி மேல் சிகிச்சைக்காக சேலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து எருமப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ராமசந்திரன் மற்றும் மனோஜ்குமாரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய ரவிசந்திரன் மற்றும் பூவராகவனை தேடி வருகின்றனர்.

newstm.in 

Next Story
Share it