இ - பாஸ் இல்லாமல் , 420 வேலை செய்து தூத்துக்குடிக்கு உதயநிதி ஸ்டாலின் பயணம் !! சட்ட நடவடிக்கை !! அமைச்சர் ஜெயக்குமார்

X

சென்னை யானைக் கவுனியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் ; சென்னையில் உள்ள குடிசைப்பகுதிகளில் தன்னார்வலர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தியதில் நல்ல பலன்கள் கிடைத்திருப்பதாக தெரிவித்தார்.

மேலும் தினந்தோறும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட களப்பணியாளர்கள் கொரோனா தடுப்பு பணிகளில் களப்பணியாற்றி வருவதாகவும் தெரிவித்தார். அனைத்து மருத்துவர்களுக்கும் மருத்துவ பணியில் ஈடுப்பட்டுள்ளவர்களுக்கும் மருத்துவர்கள் தின வாழ்த்துக்களை தெரிவித்த அமைச்சர் ,

கொரோனா தொற்று பரவலை கருத்தில் கொள்ளாமல் உதயநிதி ஸ்டாலின் இ-பாஸ் இன்றி பயணம் செய்துள்ளார். ஸ்டாலின் இ-பாஸ் வைத்து தான் தூத்துகுடி சென்றார் என்றால் அதை ஏன் டிவிட்டரில் அவர் வெளியிடவில்லை என வினா எழுப்பினார். உதயநிதி இ-பாஸ் இன்றி 420 வேலை செய்து துத்துக்குடி பயணித்தது தொடர்பாக சட்டம் தன் கடமையை செய்யும் என்று அவர் கூறினார்.

Newstm.in

Next Story
Share it