கொரோனாவால் மேலும் இரண்டு காவலர்கள் உயிரிழப்பு!

 | 

கொரோனா தொற்று காரணமாக ஓய்வுபெற்ற டிஜிபியின் கார் ஓட்டுநர், நீதிபதி பாதுகாப்பு பிரிவு உதவி ஆய்வாளர் ஆகியோர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தொற்றால் ஏற்படும் உயிரிழப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும் கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் உயிரிழப்பு  எண்ணிக்கை மிக வேகமாக உயர்கிறது. கொரோனா முதல் அலையின் போது முன்களப்பணியாளர்களான காவல்துறையினர் தொடர்ந்து உயிரிழந்தனர்.

இந்நிலையில் தற்போது இரண்டாவது அலையிலும் உயிரிழப்பு தொடர்கிறது. அந்த வகையில் ஆயுதப்படை காவலராக இருந்த சென்னையை அடுத்துள்ள புழலை சேர்ந்தவர் கமலநாதன் (33) உயிரிழந்துள்ளார்.

இவர் கொரோனா தொற்று ஏற்பட்டு கடந்த மாதம் 25ஆம் தேதி ராஜீவ் காந்தி மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அதேபோல எஸ்பி. சிஐடி பாதுகாப்பு பிரிவு காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றிவந்த ஆவடியைச் சேர்ந்த சின்னக்கண்ணு கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP