1. Home
  2. தமிழ்நாடு

அபராதத் தொகையை தவறான வங்கிக் கணக்கிற்கு அனுப்பிய டுவிட்டர் நிறுவனம்..!

1

பிரேசில் நாட்டு தேர்தல் சமயத்தில் எலான் மஸ்க்கின் சமூக வலைதளமான டுவிட்டர் தளத்தில் முடக்கப்பட்டிருந்த பல்வேறு கணக்குகள் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்து விட்டதாக அந்த நாட்டு சுப்ரீம் கோர்ட் நீதிபதி அலெக்சாண்டிரே டிமொரேஸ் குற்றஞ்சாட்டியிருந்தார்.

அதுமட்டுமில்லாமல், டுவிட்டர் தளம் மீது விதிக்கப்பட்ட புதிய தணிக்கை உத்தரவுகளால் அங்குள்ள டுவிட்டர் அலுவலகத்தை மூடி விட்டு, அதில் பணியாற்றிய ஊழியர்களை எலான் மஸ்க் அதிரடியாக நீக்கினார். இருப்பினும், டுவிட்டர் தள சேவைகள் தொடர்ந்து வழங்கப்படும் என அறிவித்திருந்தார். 

இதனிடையே, கட்டுப்பாடின்றி டுவிட்டர் தளத்தில் இருந்து தகவல்கள் வெளியாகி வருவது குறித்த வழக்கு விசாரணையின் போது, டுவிட்டர் தளத்திற்கான சட்ட விவகார பிரதிநிதியை நியமிக்க வேண்டும் என்றும், தவறினால் பிரேசிலில் டுவிட்டர் தளம் முடக்கப்படும் என்று சுப்ரீம் கோரிட் நீதிபதி டிரொரேஸ் எச்சரித்தார்.

ஆனால், நீதிபதியின் இந்த எச்சரிக்கையை எலான் மஸ்க் ஏற்க மறுத்து விட்டார். இதையடுத்து, பிரேசிலில் டுவிட்டர் தளத்தில் தடை விதிக்கப்பட்டது. மேலும், தடையை நீக்க வேண்டுமானால், 5.2 மில்லியன் அமெரிக்க டாலர் அபராதத் தொகையை செலுத்த வேண்டும் என்று டுவிட்டர் தளத்திற்கு நீதிபதி உத்தரவிட்டார்.

அதன்பேரில், அபராதத் தொகையை செலுத்திய எலான் மஸ்க், அதனை தவறான வங்கிக் கணக்குக்கு அனுப்பியுள்ளார். இதனால், பிரேசிலில் டுவிட்டர்  தளத்திற்காக தடையை நீக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பின்னர், தவறான கணக்கிக்கு பணத்தை செலுத்தியதாக சுட்டிக்காட்டிய சுப்ரீம் கோர்ட், மீண்டும் பணத்தை டுவிட்டர் தளத்தின் கணக்கிற்கு செலுத்த உத்தரவிட்டது.

Trending News

Latest News

You May Like